செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட 11 லாரிகளை படத்தில் காணலாம்.

திருவாரூர் அருகே மணல் கடத்தி வந்த 11 லாரிகள் பறிமுதல்

Published On 2019-11-05 11:11 GMT   |   Update On 2019-11-05 11:11 GMT
திருவாரூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த 11 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் அரசின் அனுமதி பெறாமல் குவாரிகள் அமைத்து அதன் மூலமாக மணல் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர்ந்து  வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் ஒரு கோடி மதிப்புள்ள மணல் மற்றும் லாரிகளை திருவாரூர் மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் நோக்கி வந்து கொண்டிருந்த 11 லாரிகளை போலீசார் மணலுடன் பறிமுதல் செய்தனர். நன்னிலம் அருகே வாழ்க்கை என்ற இடத்தில் நன்னிலம் டி.எஸ்.பி . சுகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையின் போது இந்த லாரிகள் பிடிபட்டுள்ளன. போலீசார் லாரியை மடக்கிய போது அந்த சமயத்தில் லாரிகளை நிறுத்தி விட்டு சில லாரி ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் 5 லாரி டிரைவர்களை மட்டும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஆற்று கரையோர நிலத்திலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 11 லாரிகளும் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News