செய்திகள்
பன்னீர் ரோஜா

தர்மபுரி மாவட்டத்தில் பன்னீர் ரோஜா விலை உயர்வு

Published On 2019-11-04 14:59 GMT   |   Update On 2019-11-04 14:59 GMT
தர்மபுரி மாவட்டத்தில் பன்னீர் ரோஜா விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடத்தூர்:

தர்மபுரி மாவட்டத்தில் காய்கறிகளுக்கு அடுத்த படியாக விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வரு கின்றனர். அவற்றுள் சௌந்தர ரோஜா, மல்லி, சாமந்தி, பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ், செண்டு மல்லி ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். 

பல ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டு பூக்கள் விற்பனையில் நிரந்தரமான வருமானம் பெற்று வந்தனர். தற்போழுது பயிரிட்டுள்ள பன்னீர் ரோஜாக்கள் கடந்த வாரம் ஒரு கிலோ 30 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பன்னீர் ரோஜா பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News