செய்திகள்
கோப்பு படம்

பேராவூரணி பகுதியில் 55 ரேசன் கடைகளில் பறக்கும் படை சோதனை

Published On 2019-11-02 12:24 GMT   |   Update On 2019-11-02 12:24 GMT
பேராவூரணி பகுதியில் கூட்டுறவு நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் 55 நியாவிலைக் கடைகளில் பறக்கும்படை சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர்:

கூட்டுறவுச் சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் ஆணையின்படி கூட்டுறவுத்துறை அலுவலர்களைக் கொண்டு போராவூரணி வட்டாரத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் 55 நியாவிலைக் கடைகளில் பறக்கும்படை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முறைகேடுகள் புரிந்த விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய நிறுவனங்களின் நிர்வாகத்தை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வின்போது கடும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய விற்பனையாளர் மீது குற்றவழக்கு மற்றும் நிரந்தரப் பணிநீக்கம் போன்ற கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மொ.ஏகாம்பரம் தெரிவித்தார்.
Tags:    

Similar News