செய்திகள்
மஞ்சளாறு அணை

மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Published On 2019-11-02 08:40 GMT   |   Update On 2019-11-02 08:40 GMT
முதல்போக சாகுபடிக்காக மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ளது மஞ்சளாறு அணை. கொடைக்கானல் மலைப்பகுதியில் தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழைநீர் அணையில் தேங்குகிறது.

இதன் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் முதல் போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையினால் 57 அடி உயரமுள்ள இந்த அணை நிரம்பியது.

இதை தொடர்ந்து மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழைய, புதிய ஆயக்கட்டு 3 ஆயிரத்து 386 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 128.15 அடியாக உள்ளது. வரத்து 1499 கன அடி. திறப்பு 1640 கன அடி. இருப்பு 4,298 மில்லியன் கன அடி.

வைகை அணை நீர்மட்டம் 65.03 அடி. வரத்து 2771 கன அடி. திறப்பு 1760 கன அடி. இருப்பு 4637 மில்லியன் கன அடி.

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.70 அடி. வரத்து 279 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100.52 மில்லியன் கன அடி.



Tags:    

Similar News