செய்திகள்
கைது

ஆரணி கடைவீதியில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

Published On 2019-10-25 06:39 GMT   |   Update On 2019-10-25 06:39 GMT
ஆரணி கடைவீதியில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே உள்ள திருப்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது23).இவர் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய பாளையத்திலிருந்து கவரப்பேட்டை நோக்கி சென்றார். வழியில் ஆரணி பஜார் வீதியில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது தனது விலை உயர்ந்த செல்போனை பாக்கெட்டில் வைத்திருந்தார். 2 வாலிபர்கள் திடீரென செல்போனை பிடுங்கி கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அதிர்ச்சி அடைந்த பிரதீப் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர்.

திருநிலை கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர்களான செல்வகுமார் (22), சதீஷ் குமார் (20) ஆகியோர் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வாலிபர்கள் ஆரணி பஜார் வீதியில் உள்ள ஒரு பாஸ்ட் புட்டு கடையில் பணியாற்றி வந்த 2 வாலிபர்களையும் போலீசார் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அந்த வாலிபர்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறிமுதல் செய்தனர். 2 பேரையும் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News