செய்திகள்
திமுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க.வுக்கு 28 வன்னியர் அமைப்புகள்

Published On 2019-10-19 04:48 GMT   |   Update On 2019-10-19 04:48 GMT
விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியையும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனையும் 28 வன்னியர் அமைப்புகளை உள்ளடக்கிய வன்னியர் குல சத்ரியர் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

வன்னியர் குல சத்ரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செயல்பாடுகளால் சமுதாய மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. சமுதாயத்தை அடகு வைத்து சொந்த நலனை வளப்படுத்தி கொள்வது மட்டுமே அவரது கொள்கையாக உள்ளது.

ராமதாஸ் தனது இறுதி காலம் வரை சமுதாயத்திற்காக உழைப்பதாக கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. அவரது சுய நலத்திற்காக அவர் அரசியல் செய்கிறார்.

வடதமிழகத்தில் எப்போதும் பதட்டமான சூழ்நிலை நிலவும் விதமாக மக்களை தூண்டி விடுகிறார்.

வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு, கோவிந்தசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் உள்ளிட்ட உறுதி மொழிகளை ஸ்டாலின் வழங்கி உள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு வரும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வன்னியர் சமுதாய மக்கள் வாக்களிப்பார்கள்.

விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியையும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனையும் 28 வன்னியர் அமைப்புகளை உள்ளடக்கிய வன்னியர் குல சத்ரியர் கூட்டமைப்பு ஆதரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News