செய்திகள்
திருமாவளவன்

தமிழகத்தில் பா.ஜ.க.வின் திட்டங்கள் மறைமுகமாக செயல்படுத்தப்படுகிறது- திருமாவளவன்

Published On 2019-10-06 13:18 GMT   |   Update On 2019-10-06 13:38 GMT
பா.ஜ.க.வின் திட்டங்கள் தமிழகத்தில் மறைமுகமாக செயல்படுத்தப்படுகிறது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழர்களையும், தமிழர்களின் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக செயல்படுகிறது.

இதற்கு அ.தி.மு.க. அரசு துணை போகிறது. இதனை அம்பலப்படுத்தும் வகையில் எங்களது தேர்தல் பிரசாரம் இருக்கும். இது இடைத்தேர்தலாக இருந்தாலும், வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது.

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. எனவே பிரதமர் மோடி தலையிட்டு தேச பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ள நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக சிலர் பேசி வருகிறார்கள். இதற்கு அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் ஏற்கனவே முடிந்துள்ள 3 கட்ட ஆய்வின் முடிவுகளை அதிகார பூர்வமாக வெளியிட வேண்டும். தமிழர்கள் சாதியற்ற சமுதாயமாக வாழ்ந்துள்ளதை தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை மூடி மறைக்க மத்திய அரசு முயல்கிறது.

பா.ஜ.க.வின் திட்டங்கள் தமிழகத்தில் மறைமுகமாக செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News