செய்திகள்
ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-09-27 15:21 GMT   |   Update On 2019-09-27 15:21 GMT
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகரை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதியன்று மாலை இந்த சிறுமிக்கு ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகர் துளசியம்மா தெருவை சேர்ந்த பாஸ்கர்(49) என்ற கூலித் தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். 

அதன்பேரில் சிறுமியின் பெற்றோர் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து அப்போதைய ஓசூர் டி.எஸ்.பி. ரோகிணி பிரியதர்ஷினி, சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் விசாரணை நடத்தி, பாஸ்கரை கைதுசெய்தனர். அவர் மீது சிறுமிக்கு எதிராக பாலியல் தொந்தரவில் ஈடுபடுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கருக்கு, ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து பாஸ்கரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர்ஆகி வாதாடினார்.
Tags:    

Similar News