செய்திகள்
கோப்பு படம்

குலசேகரப்பட்டினம் தசரா விழா: சென்னை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் - பயணிகள் சங்கம் கோரிக்கை

Published On 2019-09-25 09:16 GMT   |   Update On 2019-09-25 09:58 GMT
குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்காக சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் அறிவிக்க வேண்டும் என பொது மேலாளரிடம் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமசை, திருச்செந்தூர் ரெயில் பயணிகள் சங்கத் தலைவர் டி.சிவபால், செயலாளர் எஸ்.மால்மருகன், பொருளாளர் பி.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் நடக்கும் தசரா திருவிழா போல, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா புகழ் பெற்றது.

இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதையொட்டி மேற்கண்ட 12 நாட்களில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு சிறப்பு ரெயிலும், பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News