செய்திகள்
மரணம்

மீஞ்சூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி

Published On 2019-09-11 06:08 GMT   |   Update On 2019-09-11 06:08 GMT
மீஞ்சூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த கடப்பாக்கம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். மீன் பிடிக்கும் தொழிலாளி. இவரது மகள் முத்தம்மாள் (6).

கடந்த சில நாட்களாக சிறுமி முத்தம்மாளுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்த நிலையில் முத்தம்மாளின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து அவளை காட்டூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முத்தம்மாளை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி முத்தம்மாள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது.

பூண்டி அருகே உள்ள நெய்வேலியைச் சேர்ந்த ஹரீஷ்(7), மப்பேடு மோகித் தருண்(2), மணவாளநகர் நிஷாந்த் (9), தொழுவூர் வசந்தி (5), அம்மனம்பாக்கம் நந்தினி (20), கிழனூர் முத்துலட்சுமி (55) உள்ளிட்ட 7 பேர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மருத்துவக் குழு தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News