செய்திகள்
சாலை

பொக்காபுரம் அருகே மலைகிராம சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2019-08-26 11:51 GMT   |   Update On 2019-08-26 11:51 GMT
பொக்காபுரம் அருகே மலைகிராம சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் சோலூர் பேருராட்சியில் உள்ள பொக்காபுரம் அருகே தொட்டலிங்கி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிகளவில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதிக்கு செல்ல தொட்டலிங்கி-மேல் தக்கல் சாலை உள்ளது. ஆனால் வாகன வசதி கிடையாது. இதனால் இங்குள்ளவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. மேலும் இங்குள்ள குழந்தைகள் படிக்க வேண்டும் என்றால் சுமார் 7 கி.மீ. நடந்து சென்று தான் படிக்க வேண்டும். 

இதனால் ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். சில பெற்றோர் வாகன வசதி இல்லாததால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர்.

தற்போது இந்த சாலை மிகவும் மோசமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலும், மின்விளக்குகள் எரியாத நிலையிலும் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இந்த சாலையை சீரமைத்து வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News