செய்திகள்
ஆட்டோ தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

கட்டண உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2019-08-26 10:54 GMT   |   Update On 2019-08-26 10:54 GMT
கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சட்டத்தின் படி சமீபத்தில் புதிய கட்டண விபரங்களை அறிவித்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 என்று அபராதம் வசூலிக்கப்பட்டதை ரூ.5 ஆயிரம் என்று உயர்த்தியுள்ளது.

இதே போல் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.400 என்று வசூலிக்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் வரையிலும், ரேஸ் பைக் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, பைக்கில் 2 பேருக்கு மேல் பயணித்தால் ரூ.1000, இருசக்கர வாகனத்தை புதுப்பிக்கும் கட்டணம் ரூ.50-ல் இருந்து 2 ஆயிரம் என அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் மோட்டார் தொழிலையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்க்க முயற்சி செய்வதாக கூறி திண்டுக்கல்லில் பல்வேறு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கணேசன், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் தனசாமி, ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க மாநில செயலாளர் ராம்குமார். இரு சக்கர வாகன பழுது நீக்கும் சங்க செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News