செய்திகள்
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சோதனை செய்த மாநகராட்சி அதிகாரிகள்

திண்டுக்கல் தொழிற்சாலையில் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

Published On 2019-08-22 09:12 GMT   |   Update On 2019-08-22 09:12 GMT
திண்டுக்கல் தொழிற்சாலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்காரர்களை எச்சரித்தனர். இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது.

பொதுமக்களும் மாற்று பொருட்களான துணிப்பை, வாழை இலை ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கினர். தற்போது கெடுபிடி குறைந்ததால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இன்று அதிகாலை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செபஸ்டியன், கேசவன், பாலமுருகன், தங்கவேல், முருகையா மற்றும் அதிகாரிகள் பழனி சாலையில் முருகபவனம் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News