செய்திகள்
கைது

திருப்பூரில் ஆசிரியையிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த ஆட்டோ டிரைவர் கைது

Published On 2019-08-20 11:39 GMT   |   Update On 2019-08-20 11:39 GMT
திருப்பூரில் ஆசிரியையிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர்-காங்கயம் ரோடு செம்மாந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் ராம்பிரியா (32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் விநாயக்குமார் என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்கள் 6 மாதம் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விநாயக்குமார், ராம்பிரியாவை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டித்துரை (27) என்பவருடன் ராம்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தொழில் தொடங்குவதற்காக பாண்டித்துரை ரூ. 10 லட்சத்தை ராம்பிரியாவிடம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை ராம்பிரியா திருப்பி கேட்ட போது கொடுக்க மறுத்துள்ளார்.

மேலும் பாண்டித்துரை தனது அண்ணன் ராஜேஷ் குமாருடன் (29) ராம்பிரியாவின் வீட்டுக்கு சென்று மிரட்டி உள்ளனர். இது குறித்து ராம் பிரியா கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் பாண்டித்துரை, அவரது அண்ணன் ராஜேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News