search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கைது"

    • ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

    திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (60). இவரது மனைவி தேவி. இவர் தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு அருகே சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அப்போது சாலை வழக்கத்தை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுபற்றி அங்கிருந்த ஊழியர்களிடம் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் கேட்டார். மேலும் சாலை உயரமாக இருந்தால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருக்கும் என்று கூறினார். இதனால் அங்கிருந்த ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் கோபத்தில் தயாளன் மீது பாய்ந்து அவரது இடது காதை கடித்து துண்டாக துப்பினார். இதில் வலிதாங்க முடியாத தயாளன் காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துண்டான காதையும் ஐஸ்கட்டி நிரப்பிய டப்பாவில் வைத்து எடுத்து சென்றனர். அங்கு தயாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

    • தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் வெங்கட்ராவ் பேட்டையை சேர்ந்தவர் தீபா (வயது 18). கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் கமலிகர். ஆட்டோ டிரைவர் இருவரும் காதலித்து வந்தனர்.

    நெருக்கமாக பழகி வந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபா காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். தீபாவை சந்தித்து பேச கமலிகர் பலமுறை முயற்சி செய்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தீபாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் யாரும் வீட்டில் இல்லை. இதனை அறிந்த கமலிகர் தீபாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த தீபாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இதற்கு தீபா மறுப்பு தெரிவித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த கமலிகர் தீபாவை சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாக தீபாவின் வாயில் ஊற்றினார்.

    தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் வருவதற்குள் கமலிகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தீபாவின் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரீம் நகர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டோ டிரைவர் மீட்டர் கட்டணத்தில் மோசடி செய்து வங்கதேச பயணிகளிடம் அதிக பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார்.
    • வீடியோ வைரலானதை தொடர்ந்து சதாசிவ நகர் போக்குவரத்து போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

    வங்கதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த நிலையில், அங்கு ஆட்டோ ஒன்றில் ஏறி உள்ளனர். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் மீட்டர் கட்டணத்தில் மோசடி செய்து வங்கதேச பயணிகளிடம் அதிக பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார்.

    இதை அறிந்து கொண்ட அந்த தம்பதியினர் சாதுர்யமாக செயல்பட்டு மீட்டர் மற்றும் ஆட்டோ டிரைவரின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து, அவரின் ஏமாற்று வேலையை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சதாசிவ நகர் போக்குவரத்து போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளை ஏமாற்ற முயன்ற ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.

    • ஆட்டோ சென்றுகொண்டிருந்த போதே, மாணவிக்கு டிரைவர் மண்கண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்திருக்கிறார். சம்பவத்தன்றும் அவர் பள்ளிக்கு வழக்கமாக செல்லும் ஆட்டோவில் சென்றிருக்கிறார்.

    ஆனால் அன்றைய தினம், மாணவியை வழக்கமான டிரைவர் இல்லாமல், வேறொரு டிரைவரான பாலக்காடு வள்ளிக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். ஆட்டோவில் அந்த மாணவி மட்டும் இருந்துள்ளார்.

    இதனால் ஆட்டோ சென்றுகொண்டிருந்த போதே, மாணவிக்கு டிரைவர் மண்கண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை மாணவி கண்டித்திருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தபடியே இருந்திருக்கிறார்.

    மேலும் பலாத்காரமும் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம்போட்டு அழுதுள்ளார். இதனை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்தனர். அந்த பகுதியை சேர்ந்த சிலர், தங்களது வாகனத்தில் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து நிறுத்தினர்.

    பின்பு ஆட்டோவில் இருந்த மாணவியிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற விவரத்தை தெரிவித்தார். இதையடுத்தது ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியிடம் ஆட்டோ டிரைவர் அத்துமீறியதும், பலாத்காரம் செய்ய முயன்றதும் உறுதியானது. இதையடுத்து டிரைவர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    • பைக் திருடிய சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
    • போலீசார் வெங்கடேஷ் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

    பவானி:

    பவானி போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அவர் முன்னுக்கு பின் பதில் அளித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து பவானி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பவானி அருகில் உள்ள காலிங்கராயன்பாளையம், வெத்தலை மார்க்கெட் வீதியில் வசிக்கும் வெங்கடேஷ் (24) ஆட்டோ டிரைவர் என்பதும்,

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பவானி வர்ணபுரம் 1-வது வீதியில் கட்டிட கூலி தொழிலாளி ஜக்கையன் என்பவருக்கு சொந்தமான பைக் திருடிய சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேஷ் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

    • இடிப்பது போல் சென்றதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 42). இவர் சைக்கிளில் சென்று வீட்டுக்கு தேவையான சோப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் சம்பத்குமார் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் நேதாஜி சவுக் அருகே பேரணாம்பட்டு ரோடு பகுதியில் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோ சைக்கிளை இடிப்பது போல் உராய்ந்து சென்றுள்ளது.

    அப்போது சம்பத்குமார் ஆட்டோ டிரைவரிடம் ஏன் இப்படி வருகிறாய் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் சம்பத்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை அங்கிருந்து நபர்கள் தடுக்க வந்த போது அவர்களையும் அந்த ஆட்டோ டிரைவர் மிரட்டினார்.

    இந்த சம்பவங்கள் அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது மேலும் அங்கிருந்த நபர் ஒருவர் இச்சம்பவங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்.

    இதனையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் சம்பத்குமாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை தர்ஜி வரதையன் தெருவை சேர்ந்த யுவராஜ் (34) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் யுவராஜை கைது செய்தனர்.

    • பயணிகளை ஏற்றுவதில் தகராறில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் மருதுபாண்டியன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் 38, ஆட்டோ டிரைவர். மதுரை பாத்திமா நகர் விருமாண்டி மகன் மோகன் என்ற அரசு. இவரும் ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவருக்கும் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று பைபாஸ் ரோட்டில் டீக்கடை முன்பாக இருவரும் நின்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஷாஜகானின் கைவிரலை மோகன் பலமாக கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசில் ஷாஜகான் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்றவர் ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கத்தியை காட்டி மிரட்டினார்.
    • சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த டிரைவர் ஆட்டோவில் வைத்தே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்தார்.

    சென்னை:

    சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, நீலாங்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் தனியாக சென்ற சிறுமியை நிறுத்தி பேச்சு கொடுத்தார். வழியில் இறக்கி விடுகிறேன்

    என்று கூறி ஏமாற்றி தனது ஆட்டோவில் சிறுமியை ஏற்றியுள்ளார்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்ற அவர் ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கத்தியை காட்டி மிரட்டினார். சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த அவர் ஆட்டோவில் வைத்தே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்தார். பின்னர் ஆட்டோ டிரைவரின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதுபற்றி அடையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தன ர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் அடையாளம் தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் கைது செய்தனர்.

    ரோட்டில் தனியாக சென்ற சிறுமியை மடக்கி ஆட்டோவில் வைத்து மிகவும் துணிச்சலாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து நீலாங்கரை பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • வாகன சோதனையில் சிக்கினார்
    • போலீஸ் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த அக்ராவரம் மற்றும் பூங்குளம் பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் லாரி டியூப்களில் வெளியூ ருக்கு கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பஸ்நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவில் லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தியது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் ஆட்டோவை ஓட்டிவந்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35) ஆட்டோ டிரைவர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 150 லிட்டர் கள்ள ச்சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

    • மனைவி ஆஸ்பத்திரியில் மகளுடன் இருப்பதால் வீட்டு வேலைக்கு உதவி செய்ய வருமாறு அக்‌ஷய் குமாரை பிரஜாபதி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
    • அக்‌ஷய் குமாருக்கு சில குளிர்பானங்களை குடிக்க கொடுத்தார். சிறிது நேரத்தில் அக்‌ஷய் குமார் மயங்கி விழுந்ததும் அவரை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.

    காசியாபாத்:

    புதுடெல்லியை சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.

    இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சில மாநிலங்களிலும் இதே போன்று சம்பவங்கள் நடந்தன.

    இந்நிலையில் டெல்லி அருகே உள்ள காசியாபாத் நகரத்தில் மீண்டும் இதே போன்று ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    காசியாபாத் நகரை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி(வயது40), ஆட்டோ டிரைவர். அதே பகுதியில் வசித்து வருபவர் அக்ஷய் குமார் (வயது 23). அக்ஷய் குமார் மீலால் பிரஜாபதியின் மனைவியுடன் பேசி, பழகி வந்துள்ளார்.

    இதனை மீலால் பிரஜாபதி கண்டித்தார். அதன்பிறகும் அக்ஷய் குமார் அடிக்கடி பிரஜாபதியின் மனைவியுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் பிரஜாபதி கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் அக்ஷய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    கடந்த 19-ந் தேதி பிரஜாபதியின் மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மகளை டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரஜாபதியின் மனைவி உடன் இருந்து குழந்தையை கவனித்து வந்தார்.

    இதற்கிடையே தனது மனைவி ஆஸ்பத்திரியில் மகளுடன் இருப்பதால் வீட்டு வேலைக்கு உதவி செய்ய வருமாறு அக்ஷய் குமாரை பிரஜாபதி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு சில குளிர்பானங்களை குடிக்க கொடுத்தார். சிறிது நேரத்தில் அக்ஷய் குமார் மயங்கி விழுந்ததும் அவரை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.

    பின்னர் நள்ளிரவு நேரத்தில் உடல் துண்டுகளை 3 பைகளில் எடுத்து சென்று கோடா புஸ்டா பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளில் வீசி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று அங்கு குப்பைகளை தெரு நாய்கள் கிளறி கொண்டிருந்தது. அப்போது உடல் துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடல் பாகங்களின் 15 துண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் கொலை செய்யப்பட்டது அக்ஷய் குமார் என்பது தெரிய வந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்புலி பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த நிலையில் தான் பிரஜாபதியின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பிரஜாபதியை கைது செய்தனர். 

    • மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
    • அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சோழவரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி அருகில் உள்ள கடைக்கு சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விசாரணையில் மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    மாணவியை போலீசார் மீட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

    • நள்ளிரவு ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    ஈரோடு கோட்டையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இளம்பெண் செல்வபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 மாதங்களாக தங்கி உள்ளார்.

    கடந்த 28-ந்தேதி இவர் வேலை சம்பந்தமாக திருப்பூருக்கு சென்றார். வேலை முடிந்ததும் நள்ளிரவு கோவைக்கு திரும்பினார். இரவு வெகுநேரம் பஸ்சில் செல்ல முடியாது என்பதால் ஹோப் கல்லூரியில் இருந்து செல்வபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்தார்.

    புக்கிங் செய்த சில நிமிடங்களில் ஹோப் கல்லூரி பஸ் நிறுத்தத்துக்கு ஆட்டோ வந்தது. இளம்பெண் அந்த ஆட்டோவில் ஏறினார்.

    நள்ளிரவு என்பதால் அவினாசி ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ஆட்டோவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனையடுத்து ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டினார். இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் ஆட்டோவை நிறுத்துமாறு சத்தம் போட்டார். ஆனால் இதனை காதில் வாங்கி கொள்ளாத அவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி அவரை கடத்தி செல்ல முயன்றார்.

    ஆட்டோ அவினாசி ரோட்டில் உள்ள வணிக வளாகம் அருகே வந்த போது ஆட்டோவில் இருந்து இளம்பெண் கீழே குதித்தார். அருகில் போலீஸ் நிலையம் இருந்ததால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை அங்கேயே விட்டு தப்பிச் சென்றார்.

    கீழே குதித்ததில் இளம்பெண் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இது குறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இளம்பெண்ணை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் பீளமேடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது கோவை உக்கடம் அருள் நகரை சேர்ந்த முகமது சாதிக் (வயது 43) என்ற ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நள்ளிரவு ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×