லாரி டியூப்களில் சாராயம் கடத்திய ஆட்டோ டிரைவர் கைது

வாகன சோதனையில் சிக்கினார் போலீஸ் விசாரணை
லாரி டியூப்களில் சாராயம் கடத்திய ஆட்டோ டிரைவர் கைது
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் மற்றும் பூங்குளம் பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் லாரி டியூப்களில் வெளியூ ருக்கு கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

அதன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பஸ்நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவில் லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தியது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் ஆட்டோவை ஓட்டிவந்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35) ஆட்டோ டிரைவர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 150 லிட்டர் கள்ள ச்சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com