என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
- மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
- அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சோழவரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி அருகில் உள்ள கடைக்கு சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.
இதுகுறித்து போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விசாரணையில் மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
மாணவியை போலீசார் மீட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
Next Story






