என் மலர்

  நீங்கள் தேடியது "auto driver arrested"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நள்ளிரவு ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  கோவை:

  ஈரோடு கோட்டையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

  இளம்பெண் செல்வபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 மாதங்களாக தங்கி உள்ளார்.

  கடந்த 28-ந்தேதி இவர் வேலை சம்பந்தமாக திருப்பூருக்கு சென்றார். வேலை முடிந்ததும் நள்ளிரவு கோவைக்கு திரும்பினார். இரவு வெகுநேரம் பஸ்சில் செல்ல முடியாது என்பதால் ஹோப் கல்லூரியில் இருந்து செல்வபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்தார்.

  புக்கிங் செய்த சில நிமிடங்களில் ஹோப் கல்லூரி பஸ் நிறுத்தத்துக்கு ஆட்டோ வந்தது. இளம்பெண் அந்த ஆட்டோவில் ஏறினார்.

  நள்ளிரவு என்பதால் அவினாசி ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ஆட்டோவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

  இதனையடுத்து ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டினார். இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் ஆட்டோவை நிறுத்துமாறு சத்தம் போட்டார். ஆனால் இதனை காதில் வாங்கி கொள்ளாத அவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி அவரை கடத்தி செல்ல முயன்றார்.

  ஆட்டோ அவினாசி ரோட்டில் உள்ள வணிக வளாகம் அருகே வந்த போது ஆட்டோவில் இருந்து இளம்பெண் கீழே குதித்தார். அருகில் போலீஸ் நிலையம் இருந்ததால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை அங்கேயே விட்டு தப்பிச் சென்றார்.

  கீழே குதித்ததில் இளம்பெண் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இது குறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இளம்பெண்ணை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  இந்த தகவல் கிடைத்ததும் பீளமேடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது கோவை உக்கடம் அருள் நகரை சேர்ந்த முகமது சாதிக் (வயது 43) என்ற ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

  நள்ளிரவு ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
  • மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை ஆட்டோ டிரைவர் கற்பழித்தார்.

  ஆவடி:

  ஆவடியை அடுத்த பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பட்டாபிராமில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  கடந்த 24-ந்தேதி மாலையில் மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். அப்போது அவர் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்தனர்.

  இதனால் மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு அன்று இரவு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

  அப்போது ஆவடியை அடுத்த பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் (வயது38). தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய மாணவி சாலையில் நின்று கொண்டிருந்தார்.

  அப்போது ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் மாணவியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். ஆட்டோவில் ஏறிய மாணவி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் கூறினார்.

  இதையடுத்து மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை கொடூராக கற்பழித்தார்.

  அப்போது மாணவி கூச்சலிட்டார். உடனே அங்கிருந்து ராமகிருஷ்ணன் தப்பி சென்று விட்டார். பின்னர் அந்த மாணவி அங்கிருந்து சாலை வழியாக தப்பி ஓடி வந்தார். இதைப் பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், பொதுமக்களும் அவரை மீட்டு வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  பின்னர் ஆவடி மகளிர் போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

  இது குறித்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணனை ஆவடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
  • கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.

  கடலூர்:

   பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). ஆட்டோ ஓட்டி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி (25). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

  இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்ததனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.

  அதிர்ச்சி அடைந்த கனிமொழி தன்னை திருமணம் செய்து கொள்ள சக்திவேலை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை செய்து சக்திவேலை கைது செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்.
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை

  நத்தம்:

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (23).

  ஆட்டோ டிரைவர்.இவர் லிங்கவாடி பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

  இதுகுறித்து சிறுமியின் தாயார் நத்தம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் விசாரணை செய்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆட்டோ டிரைவர் சுரேசை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றதால் தகராறு ஏற்பட்டது
  • இதில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  ஒட்டன்சத்திரம்:

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் நேதாஜிநகரை சேர்ந்தவர் பிச்சைபாண்டி(50). இவர் அரசு போக்குவரத்து கழக மதுரை கிளையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

  ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் அருகே முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றார்.

  அப்போது ஆட்டோவில் வந்தவர்களுக்கும், பிச்சைபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரமடைந்த கும்பல் பிச்சைபாண்டியை தாக்கி அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

  இதில் ஆட்டோ டிரைவர் மனோகரனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சதீஸ்குமார், மகுடீஸ்வரன், சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உளுந்தூர்பேட்டை அருகே மாணவியை ஆட்டோவில் கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  உளுந்தூர்பேட்டை:

  உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் புத்தாடை வாங்குவதற்காக மாணவி ஒரு ஆட்டோவில் எலவனாசூர்கோட்டையில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். பின்னர் புத்தாடை வாங்கிவிட்டு அதே ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் மாணவியின் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் ஆட்டோ டிரைவர் சென்றதாக தெரிகிறது.

  இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டார். ஆனால் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் மிரட்டி, அவரை கடத்தி சென்றதாக தெரிகிறது.

  இந்த நிலையில் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதுகுறித்து அந்த மாணவி எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை கடத்தி சென்றதாக புகைப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மாணவி கீழே குதித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #delhiwomanmolestation #autodriverarrested

  கும்பகோணம்:

  டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 2-ந்தேதி வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணத்துக்கு ரெயில் மூலம் வந்தார்.

  ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் நகர் முழுவதும் சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் கேட்டதற்கு வாக்குவாதம் செய்து செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார்.

  நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம் பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்களுக்கு சபலம் ஏற்பட்டது. இளம்பெண்ணிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.

  2 வாலிபர்களும், இளம்பெண்ணை ஆள்நட மாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேருக்கும் செல்போன் மூலம் பேசி அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர்.


  பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

  இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்த மன், அன்பரசன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது காலில் காயம் அடைந்த வசந்த், தினேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  கற்பழிப்பு வழக்கில் கைதான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.

  இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவர் எதற்காக ஒரு மணி நேரம் ஆட்டோவில் வைத்து சுற்றினார் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.

  ஆட்டோ டிரைவர் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தார். போலீசார், ஆட்டோ டிரைவரை பிடிக்க தீவிரம் காட்டினர்.


  ரெயில் நிலைய பகுதியில் காமராஜர் சாலை, புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

  கும்பகோணத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

  அப்போது ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ டிரைவர் மட்டும் வித்தியாசமாக தனது ஆட்டோவின் முன் பக்கத்தில் இருந்த பம்பர், ஹாரன், மற்றும் கண்ணாடியை மாற்றி பழைய ஆட்டோவைப் போல் டிசைன் செய்து இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

  அந்த ஆட்டோ யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். பக்கத்து ஊர்களிலும் சென்று ஆட்டோவை தேடினர்.

  அப்போது திருவிடைமருதூர் திருப்பணிபேட்டை யில் அந்த ஆட்டோ நின்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அதன் டிரைவர் குருமூர்த்தி (வயது25) என்பவரை நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

  அவர் போலீசாரிடம் கூறுகையில், “சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் சவாரியை இறக்கி விட்டு திரும்பியபோது இளம்பெண் ஆட்டோவை நிறுத்தி ஓட்டலில் விடுமாறு ஆங்கிலத்தில் கூறினார். நானும் அவர் சொன்னபடி ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன். வழியில் தகராறு ஏற்பட்டதால் நடுவழியில் இறக்கி விட்டதாக ஒப்புக் கொண்டார்.

  கண்காணிப்பு கேமிரா மூலம் ஆட்டோவை போலீசார் தேடுவதை அறிந்து தனது ஆட்டோவின் முன் பகுதியை மாற்றினேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

  இவருக்கு வாலிபர்களுடன் தொடர்பு உள்ளதா? தன்னை நம்பி ஆட்டோவில் ஏறிய பெண்ணை நடுரோட்டில் ஏன் இறக்கி விட்டார்? என்பது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. #delhiwomanmolestation #autodriverarrested

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி போக்குவரத்து பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்பழகன். (வயது 55). இவர் நேற்று கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த ஜாண் (39) என்பவர் ஆட்டோவில் கடற்கரை சாலை வழியாக செல்ல முயன்றார். 

  இதனை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தடுத்து நிறுத்தி அந்த வழியாக செல்ல கூடாது என கூறினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஜாண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

  இதுகுறித்து அன்பழகன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆட்டோ டிரைவர் ஜாணை போலீசார் கைது செய்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நித்திரவிளை அருகே இளம்பெண்ணை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நித்திரவிளை:

  நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஷார்மி (வயது 32).

  இவர் வெளியில் செல்லும்போது காஞ்சாம்புறம் தேனாம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (36) என்பவரது ஆட்டோவை பயன்படுத்தி வந்தார். சமீபகாலமாக ராஜனின் ஆட்டோவில் செல்லாமல் வேறு ஒரு ஆட்டோவில் சென்றார்.

  இதனால் ராஜன், ஆத்திரத்தில் ஷார்மியுடன் தகராறில் ஈடுபட்டார். நேற்று ஷார்மி பாலாமடம் பகுதியில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி ராஜன் தாக்கினார். இதில் காயம் அடைந்த ஷார்மி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

  பின்னர் இதுபற்றி ஷார்மி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.

  பேரையூர்:

  திருமங்கலம் நாகசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது40). இவரும், இவரது மகளும் கடந்த 3-ந்தேதி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சித்ராவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

  இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

  இதில் சித்ராவிடம் நகையை பறித்தது சாக்கிலிப்பட்டியை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் திருப்பதிராஜா (வயது28), தனக்கன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (30) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 5 பவுன் நகையை மீட்டனர்.

  திருப்பதிராஜா காலையில் ஆட்டோ டிரைவராகவும், இரவில் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். செல்லப்பாண்டி மீது நகை பறிப்பு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  ×