பண்ருட்டி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.
 கைதான ஆட்டோ டிரைவர் சக்திவேல்.
 கைதான ஆட்டோ டிரைவர் சக்திவேல்.
Published on

கடலூர்:

 பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). ஆட்டோ ஓட்டி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி (25). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்ததனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.

அதிர்ச்சி அடைந்த கனிமொழி தன்னை திருமணம் செய்து கொள்ள சக்திவேலை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை செய்து சக்திவேலை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com