வாயில் விஷம் ஊற்றி காதலி கொலை: ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்

தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாயில் விஷம் ஊற்றி காதலி கொலை: ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் வெங்கட்ராவ் பேட்டையை சேர்ந்தவர் தீபா (வயது 18). கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் கமலிகர். ஆட்டோ டிரைவர் இருவரும் காதலித்து வந்தனர்.

நெருக்கமாக பழகி வந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபா காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். தீபாவை சந்தித்து பேச கமலிகர் பலமுறை முயற்சி செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தீபாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் யாரும் வீட்டில் இல்லை. இதனை அறிந்த கமலிகர் தீபாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

அப்போது வீட்டில் இருந்த தீபாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இதற்கு தீபா மறுப்பு தெரிவித்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த கமலிகர் தீபாவை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாக தீபாவின் வாயில் ஊற்றினார்.

தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வருவதற்குள் கமலிகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தீபாவின் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரீம் நகர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com