செய்திகள்
மெட்ரோ ரெயிலில் கல்வி பயணம் செல்லும் மாணவர்கள்

மெட்ரோ ரெயிலில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயணம்

Published On 2019-08-07 19:07 GMT   |   Update On 2019-08-07 19:07 GMT
மெட்ரோ ரெயிலை பற்றியும், அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயணம் சென்றனர்.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயிலை பற்றியும், அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மாணவர்களுக்கு கல்வி பயணம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கல்வி பயணம் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 31 ஆயிரத்து 178 மாணவர்கள் பயணம் செய்து பயன் பெற்றனர். 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான கல்வி பயணம் ஜூன் 4-ந்தேதி முதல் தொடங்கி, இதுவரை 8 ஆயிரத்து 708 மாணவர்கள் மெட்ரோ ரெயிலில் கல்வி பயணம் மேற்கொண்டு பயன் பெற்றனர்.
Tags:    

Similar News