செய்திகள்
கவர்னர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடந்த போது எடுத்த படம்.

காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து- கவர்னர் மாளிகையில் முற்றுகை போராட்டம்

Published On 2019-08-06 10:02 GMT   |   Update On 2019-08-06 10:02 GMT
காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
சென்னை:

காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமும் அன்சாரி, த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றும் சுப.வீரபாண்டியன், எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இன்று காலை கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றனர்.

இதற்காக சின்னமலை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகை அருகில் சென்று விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுமார் 300 பேர் வரை கைதானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள சமூகநலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News