செய்திகள்
கொலை செய்யப்பட்ட உமாநாத்

திண்டிவனம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து ஊழியரை கீழே தள்ளி கொன்ற வாலிபர் கைது

Published On 2019-08-06 09:53 GMT   |   Update On 2019-08-06 09:53 GMT
திண்டிவனம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து ஊழியரை கீழே தள்ளி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி அந்தேரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் உமாநாத் (வயது 28). இவர்சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இரவு சொந்தஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து சென்னையிலிருந்து விருத்தாசலம் செல்லுவதற்காக ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில்ஏறி பயணம் செய்தார்.

அவர் பயணம் செய்த பெட்டியில் மதுரையை சேர்ந்து முத்தரசன் என்ற வாலிபரும் இருந்தார். ரெயில் திண்டிவனம் அருகே நள்ளிரவு வந்துகொண்டிருந்தது. அப்போது உமாநாத்துக்கும் முத்தரசனுக்கும் இடையே திடீரென்று வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தரசன் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த உமாநாத்தை கீழேதள்ளினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த உமாநாத் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இது குறித்து ரெயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் விழுப்புரம் ரெயில்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில் விழுப்புரம் வந்ததும் அங்கு தயாராக நின்ற போலீசார் முத்தரசனை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு ரெயில்வேபோலீசாருக்கு விழுப்புரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். செங்கல்பட்டு போலீசார் விரைந்து வந்து முத்தரசனிடம் விசாரணை நடத்தினர். பின்பு அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News