search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் கொலை"

    • மாட்டுப் பண்ணை ஊழியர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார்.

    இந்த பண்ணையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த மாரிச்சாமி சிவரக்கோட்டை சூர்யா நகரில் குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார். கடந்த 18-ந்தேதி வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால் மனைவி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாரிச்சாமி வேலைபார்த்த மாட்டுப் பண்ணையில் விசாரணை நடத்திய போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் விசாரணையில் அங்கு பால் கறவை செய்து வரும் 17 வயது சிறுவன் முன் விரோதத்தில் தனது கூட்டாளிகளுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கொலைக்கு காரணமாக கருதப்படும் 17 வயது சிறுவன், 15 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கள்ளிக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    • சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    செங்கல்பட்டு:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி ஊரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார்.

    சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல், முத்தமிழ்நகர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மனோகர் (65). இவர்கள் இருவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது சக்திவேலுக்கும், மனோகருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 31-10-2011 அன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மீது செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார்.

    இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் வையாபுரி ஆஜரானார்.

    • கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • காரில் உடலை எடுத்து வந்தபோது வாகன சோதனை எதிலும் சிக்காமல் பாக்கியலட்சுமி நைசாக சென்னை மாநகருக்குள் ஊடுருவி உள்ளனர்.

    தன்னை விட 9 வயது மூத்த பாக்கியலட்சுமியை திருமணம் செய்து இருந்தாலும் ஜெயந்தனின் விருப்பத்தால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    ஆனால் பாக்கியலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடுவதை ஜெயந்தன் தனது குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்தார். மேலும் மற்ற நபர்களுடன் பாக்கியலட்சுமி தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக அவருக்கு புதிய செல்போன் நம்பரையும் வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அதிலும் அவர் தனக்கு ஏற்கனவே பழக்கமான நபர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது வெளியில் சென்று வந்தார்.

    பாக்கியலட்சுமியின் இந்த நடவடிக்கையால் ஜெயந்தனின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது தான் பாக்கியலட்சுமியின் கடந்த கால வாழ்க்கை தெரிந்தது.

    இதற்கிடையே பாக்கியலட்சுமியின் செல்போன் எண் எப்போதும் பிசியாக இருந்ததால் ஜெயந்தன் கண்டித்து பாலியல் தொழிலை விட்டு விட்டு தன்னுடன் மட்டும் குடும்பம் நடத்தும்படி வற்புறுத்தினார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் பாக்கியலட்சுமி தனது தாலியை கழற்றி ஜெயந்தனிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். எனினும் பாக்கியலட்சுமி மீது தீராத ஆசை மற்றும் அன்பு கொண்ட ஜெயந்தன் அவரை குடும்பம் நடத்த தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

    இந்த தகராறில் தற்போது ஜெயந்தன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 38 வயது ஆனாலும் பாக்கியலட்சுமி தனது கட்டுக்கோப்பான உடல் அழகால் பலரை கட்டுப்படுத்தி வந்து உள்ளார்.

    இந்த வழக்கில் கொலைக்கு உதவி செய்து கைதான சங்கருக்கும், பாக்கியலட்சுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து உள்ளது. ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைக்க உதவிய சங்கர் மற்றும் கோவளத்தை சேர்ந்த கோவில் பூசாரி வேல் முருகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயந்தனை விட்டு பிரிந்து சென்று விட்டேன்.
    • எனக்கு தெரிந்த சங்கர் என்பவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்தோம்.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்த 29 வயது வாலிபர் ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை துண்டு துண்டாக்கி விபசார அழகி ஒருவர் கோவளத்தில் கொன்று புதைத்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவில் வசித்து வந்த ஜெயந்தன் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மாயமான ஜெயந்தன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுபற்றி பழவந்தாங்கல் போலீசில் ஜெயந்தனின் அக்கா ஜெயகிருபா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பலாம்பட்டியில் வசித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற விபசார அழகியுடன் ஜெயந்தனுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பாக்கியலட்சுமிக்கு 39 வயதாகும் நிலையில் ஜெயந்தன் அவருடன் வாழ விரும்பியுள்ளார்.

    ஆனால் பாக்கியலட்சுமிக்கோ அதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பாக்கியலட்சுமி, ஜெயந்தனை பிரிந்து பொன்னமராவதியில் போய் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ஜெயந்தன் அங்கு சென்று என்னுடன் வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு பாக்கியலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜெயந்தனை, பாக்கியலட்சுமி துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை கோவளத்துக்கு கடத்தி வந்து தோண்டி புதைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக பாக்கியலட்சுமி போலீசில் அளித்து உள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள லாட்ஜில் விபசார தொழிலுக்காக நான் சென்றிருந்தேன். அப்போதுதான் ஜெயந்தனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. என்னுடன் உல்லாசம் அனுபவித்த ஜெயந்தன் என்னை மிகவும் பிடித்திருப்பதாக கூறினார்.

    எனது செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு என்னுடன் ஜெயந்தன் போனில் பேசி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக கூறிய ஜெயந்தன் திருமணம் செய்ய விரும்பினார்.

    ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லாமலேயே இருந்தது. ஜெயந்தன் தொடர்ந்து வற்புறுத்தியதால் திருமணத்துக்கு சம்மதித்தேன். இதையடுத்து விழுப்புரம் மயிலம் கோவிலில் வைத்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் இருவரும் ஒன்றாக வசித்து வந்தோம்.

    தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஜெயந்தன் வற்புறுத்தினார். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயந்தனை விட்டு பிரிந்து சென்று விட்டேன். புதுக்கோட்டையில் உள்ள சொந்த ஊருக்கு நான் சென்றுவிட்டேன்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி ஜெயந்தன் என்னை பார்க்க வந்தார். அப்போது என்னுடன் குடும்பம் நடத்த ஏன் வர மறுக்கிறாய்? என கேட்டு தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து எனக்கு தெரிந்த சங்கர் என்பவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்தோம். பின்னர் கை மற்றும் கால்களை வெட்டி எடுத்து தனியாக பார்சல் செய்தோம்.

    பின்னர் 20-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் பஸ் ஏறி காலை 11 மணி அளவில் கோவளத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்கு கடற்கரை பகுதியில் கை, கால்களை குழிதோண்டி புதைத்தேன். பின்னர் ஊருக்கு சென்றுவிட்டேன்.

    இதன்பிறகு 7 நாட்கள் கழித்து 26-ந்தேதி தலை மற்றும் வயிற்றுப்பகுதி உடல் பாகங்களை காரில் எடுத்து வந்தேன். இந்த உடல் பாகங்களை சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை அருகே புதைத்தேன். இதற்கு எனக்கு தெரிந்த பூசாரி வேல்முருகன் துணையாக இருந்தார். அவர் தான் மோட்டார் சைக்கிளில் உடலை எடுத்துச்செல்ல உதவினார்.

    கொலை நடந்து 2 வாரத்துக்கு மேலாகிவிட்டதால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பரங்கிமலை உதவி கமிஷனர் அமீர் அகமது பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாக்கியலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

    புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வசாதாரணமாக உடல் பாகங்களை பஸ் மற்றும் காரில், பாக்கியலட்சுமி எடுத்து வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரில் உடலை எடுத்து வந்தபோது வாகன சோதனை எதிலும் சிக்காமல் பாக்கியலட்சுமி நைசாக சென்னை மாநகருக்குள் ஊடுருவி உள்ளனர்.

    பாக்கியலட்சுமி விபசார அழகி என்று தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துகொண்ட ஜெயந்தனுக்கு அதன் பின்னரே அதிர்ச்சி காத்திருந்தது. 19 வயதில் மகன் இருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுவும் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

    இளமை பருவத்தில் ஏற்பட்ட தவறான பழக்கம் வாலிபர் ஜெயந்தனின் உயிரை எடுத்திருப்பதாக கூறி போலீசார் வருத்தப்பட்டனர்.

    • பாக்கியலட்சுமி புதுக்கோட்டை சென்றிருப்பதை அறிந்து, கடந்த மாதம் 18-ந்தேதி அவரை தேடிச்சென்றார்.
    • கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த சங்கர், பூசாரி வேல்முருகன் ஆகியோரை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    திருச்சி:

    விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜெயந்தன் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தனது சகோதரி ஜெயக்கிருபா வீட்டில் தங்கி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு விமான நிறுவனத்த்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த மாதம் கடந்த 18-ந்தேதி பணியை முடித்துவிட்டு, சொந்த ஊரான விழுப்புரம் சென்றுவிட்டு வருவதாக சகோதரியிடம் கூறிச்சென்ற ஜெயந்தன் அதன்பிறகு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்கிருபா, சொந்த ஊருக்கும், பணி செய்யும் இடத்திலும் விசாரித்தபோது அவர் வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. பதட்டம் அடைந்த ஜெயக்கிருபா தம்பியை காணவில்லை என்று சென்னை பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயந்தனை தேடி வந்தனர்.

    அப்போது ஜெயந்தனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது அது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள செம்மாளப்பட்டி கிராமத்தை காட்டியது. உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் கடந்த 1-ந்தேதி புதுக்கோட்டை விரைந்தனர். சிக்னல் அடையாளம் காணப்பட்ட வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

    முதலில் அப்படியொரு நபரை தனக்கு தெரியாது என்று மறுத்த பாக்கிலட்சுமி, உளறல் பேச்சால் மாட்டிக்கொண்டார். உரிய முறையில் விசாரித்தபோது, விமான நிலைய ஊழியர் ஜெயந்தனை தான் கொலை செய்துவிட்டதாகவும், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி சென்னை கோவளம் கடற்கரையில் புதைத்துவிட்டதாகவும் கூறியதை கேட்டு போலீசாருக்கே தலைசுற்றியது.

    அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு திருமணமாகி அவரது நடத்தை சந்தேகத்தில் கருத்து வேறுபாட்டால் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தோற்றத்தில் அழகு, மயக்கும் பேச்சு ஆகியவற்றை வீணாக்க விரும்பாத பாக்கியலட்சுமி, மகனை உறவினர் பொறுப்பில் விட்டுவிட்டு தலைநகர் சென்னை சென்றார்.

    அங்கு முதலில் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி வாடகைக்கு ஒரு வீட்டை பிடித்தார். பகலில் பாலியல் தொழில், இரவில் வீட்டில் தஞ்சம் என்றிருந்தபோது, விமான நிலையத்தில் பணியாற்றிய ஜெயந்தன் பாக்கியலட்சுமியை பார்த்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ஜெயந்தன், ஒட்டிக்கொள்வதை விட கட்டிக்கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

    இதுபற்றி தனது குடும்பத்தாரிடம் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக்கருதி, கடந்த 2020-ல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு பாக்கியலட்சுமியை மனைவியாக்கினார். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்... என்பதற்கேற்ப கணவர் உறவு வந்தாலும், பழக்கதோஷமான பாலியல் தொழிலை அவர் கைவிடவில்லை. கணவரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு விபசார தொழிலுக்கு செல்லும் விஷயம் ஜெயந்தனுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2021-ல் ஜெயந்தனை பிரிந்த பாக்கியலட்சுமி முழுநேர பாலியல் தொழிலாளியானார். இருந்தபோதிலும், அவரை எப்படியாவது திருத்தி தன்னுடன் குடும்பம் நடத்த வைக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட ஜெயந்தன் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

    அதன்படி பாக்கியலட்சுமி புதுக்கோட்டை சென்றிருப்பதை அறிந்து, கடந்த மாதம் 18-ந்தேதி அவரை தேடிச்சென்றார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி, 19 வயதில் மகன் இருப்பதே தெரிந்தது. இப்படியொரு மோசக்காரியிடம் வாழ்வை தொலைத்து விட்டோமே என்று மனம் நொந்த ஜெயந்தன் அவரை கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தனை பாக்கியலட்சுமி அடித்து கொலை செய்தார்.

    பாழாய்போன பாலியல் தொழிலை துணிந்து செய்த பாக்கியலட்சுமிக்கு கொலையை மறைப்பதும் பெரிதாக தெரியவில்லை. தனக்கு உதவியாக புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் கோவளம் பகுதியை சேர்ந்த பூசாரி வேல்முருகன் ஆகியோரை அழைத்துக்கொண்டார். கொலையான ஜெயந்தனின் உடலை கறியை வெட்டுவது போல் முதலில் கை, கால்களை தனியாக எடுத்துக் கொண்டார்.

    பின்னர் அதனை பிளாஸ்டிக் பைகளில் வைத்து, தைரியமாக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்து கோவளத்தை அடைந்தார். அங்குள்ள கடற்கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்தார். சில நாட்கள் தன்னை யாரேனும் நோட்டமிடுகிறார்களா என்பதை கவனித்தார்.

    யாருக்கும் சந்தேகம் வராததால் மீண்டும் புதுக்கோட்டை வந்து, மீதமிருந்த தலை மற்றும் உடல் பாகங்களை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்து, வாடகைக்கு ஒரு காரை பிடித்துக்கொண்டு கோவளம் சென்று அதே பகுதியில் புதைத்தார்.

    தன்னைவிட 10 வயது மூத்தவரான பாக்கியலட்சுமியை முதல் பார்வையிலேயே மனைவியாக்க விரும்பி திருமணம் செய்து கொண்டவரை சற்றும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த பாக்கியலட்சுமியின் நடவடிக்கை மற்றும் வாக்குமூலத்தால் போலீசார் உறைந்து போனார்கள்.

    இதையடுத்து அவரை கைது செய்து பழவந்தாங்கல் அழைத்து சென்ற போலீசார், மருத்துவக்குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று பாக்கியலட்சுமி புதைத்த இடத்தில் இருந்து ஜெயந்தனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல் இந்த கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த சங்கர், பூசாரி வேல்முருகன் ஆகியோரை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அழகு எப்போதுமே ஆபத்து என்பதற்கு சென்னை விமான நிலைய ஊழியரின் சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது.

    • கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்தார்.
    • தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து, சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்தனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (வயது 29). இவர், சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    ஜெயந்தன், கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி மதியம் நங்கநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். செல்லும்போது, பணி முடிந்ததும், அப்படியே சொந்த ஊரான விழுப்புரம் போய்விட்டுதான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் அதன்பிறகு ஜெயந்தன் மாயமானார். அவரது சொந்த ஊருக்கும் செல்லவில்லை. சகோதரி வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி, செல்போனில் தொடர்பு கொண்டபோது ஜெயந்தனின் செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில் பழவந்தாங்கல் போலீசார், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவைகளை வைத்து ஆய்வு நடத்தியபோது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1-ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண், முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப்பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்துச்சென்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை கூறினார்.

    இந்த கொலைக்கு, தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறினார்.

    மேலும் போலீசாரிடம் பாக்கியலட்சுமி கூறியதாவது:-

    பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த என்னை ஜெயந்தன், தாம்பரத்தில் உள்ள ஒரு விடுதியில் முதலில் சந்தித்தார். அதில் பழக்கம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் வைத்து என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டில் நான் ஜெயந்தனை விட்டு பிரிந்து விட்டேன்.

    கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்தார். அதனால் தான் அவரை கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து, சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்தனர். பழவந்தாங்கல் போலீசார் பாக்கியலட்சுமியை பெண் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தை பார்வையிட உள்ளனர்.

    பின்னர் வருவாய் துறையினர், மருத்துவக்குழு முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

    திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தில் உடலை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜெயந்தன் கொலை நடந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் அந்த மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×