செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை

மழை ஓய்ந்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2019-07-29 10:21 GMT   |   Update On 2019-07-29 10:21 GMT
நீர்பிடிப்பில் மழை ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
கூடலூர்:

தமிழகத்தில் இந்த ஆண்டு வறட்சி அதிகரித்து காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 2-ம் போக நெல்சாகுபடிக்காவது தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தற்போது மழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 205 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக பகுதிக்கு அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 29.53 அடியாக உள்ளது. 129 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.30 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.14 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News