செய்திகள்
போராட்டம்

ஆணவ படுகொலையை கண்டித்து கோவையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-10 09:21 GMT   |   Update On 2019-07-10 09:21 GMT
ஆணவ படுகொலையை கண்டித்து கோவையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
கோவை:

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை டாடாபாத் மின் வாரிய அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொது செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், முதன்மை செயலாளர் பாவரசு, மண்டல அமைப்பு செயலாளர் சுசி கலையரசன், கோவை குமணன், சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் இலக்கியன் வரவேற்று பேசினார்.

மேட்டுப்பாளையம் வர்ஷினி பிரியா- கனகராஜ் ஆணவ படுகொலையை கண்டித்தும், சாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் இயற்ற கோரியும், மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாதி ஆணவ படுகொலையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News