செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்புக்கு வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பம்- சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

Published On 2019-07-10 07:38 GMT   |   Update On 2019-07-10 07:38 GMT
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்திருப்பது தொடர்பான புகார் குறித்து சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
சென்னை:

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மருத்துவ படிப்பில் சேருவதற்காக வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தது. அவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் மருத்துவ கலந்தாய்வில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.



இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதத்திற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்பித்த மாணவர்களில், இருப்பிட சான்றுகள் போலியாக இருந்ததால் 3616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். போலி இருப்பிட சான்றிதழ்கள் கொடுத்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
Tags:    

Similar News