செய்திகள்
கஞ்சா

திண்டுக்கல் பகுதியில் புது விதமாக கஞ்சாவுக்கு அடிமையாகும் வாலிபர்கள்

Published On 2019-07-07 11:19 GMT   |   Update On 2019-07-07 11:19 GMT
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வாலிபர்கள் புது விதமாக கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்த போதும் பல இடங்களில் வாலிபர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே டாஸ்மாக் கடையால் மதுவுக்கு அடிமையாகும் வாலிபர்கள் கஞ்சா புகைப்பதால் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. மது வாங்க பணம் இல்லாதவர்கள் போதை மாத்திரை, பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் சொல்யூசன் மற்றும் பைக்குகளில் பெட்ரோல் டேங்குகளில் நுகர்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தற்போது புது விதமாக குளிர்பான பாட்டில்களின் நடுவே துளையிட்டு பேனாக்களை ஊது குழல் போல் வெட்டி சொருகி விடுகின்றனர். பாட்டிலுக்குள் போதை கலந்த தண்ணீரையும் கஞ்சாவையும் உள்ளே போட்டு அடைக்கின்றனர். பின்னர் ஊது குழல் மூலம் இழுத்து கஞ்சா புகைத்து வருகின்றனர்.

வேடப்பட்டி, மின் மயானம், எம்.வி.எம். கல்லூரி பகுதிகளில் கஞ்சா வாலிபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகள் நடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

இதுவே பல்வேறு குற்றச் செயல்களுக்கு வழி வகுக்கின்றது. எனவே போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து கின்றனர்.

Tags:    

Similar News