செய்திகள்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்

நெல்லை, அனந்தபுரி ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2019-06-29 02:53 GMT   |   Update On 2019-06-29 02:53 GMT
நெல்லை, அனந்தபுரி ரெயில்கள் புறப்படும் நேரம் ஜூலை 1-ந்தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர்-குருவாயூர் (வண்டி எண்16127) தினசரி காலை 8.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.25 மணிக்கு புறப்படும். இதைப்போல எழும்பூர்-கொல்லம் (16723) தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும், எழும்பூர்-நெல்லை (12631) தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 7.50 மணிக்கும் புறப்படும்.

மேலும் எழும்பூர்-தஞ்சாவூர் (16865) தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கும், எழும்பூர்-சேலம் (22153) தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.45 மணிக்கும், செங்கல்பட்டு-கச்சிகுடா (17652) தினசரி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3.20 மணிக்கும் புறப்படும்.



இதைப்போல சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News