செய்திகள்

வானூர் அருகே இளம்பெண் கடத்தல்: பதட்டம்-போலீஸ் குவிப்பு

Published On 2019-06-26 14:33 GMT   |   Update On 2019-06-26 14:33 GMT
வானூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணையும் வாலிபரையும் தேடி வருகிறார்கள்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 40). இவரது மகள் நந்தினி(21). பி.பி.ஏ.படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தினி வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. ரவி தனது மகளை உறவினர் மற்றும் நண்பர்கள் தேடி பார்த்தார். எங்கும் அவர் இல்லை. இதனால் ரவி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதில் தனது மகளை நெசல் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் வழக்குபதிவு செய்து நந்தினியை கடத்திசென்ற அரவிந்த்தை தேடி வருகின்றார்.

நந்தினியும், அரவிந்தும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே 2 கிராமங்களிலும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க மாத்தூர் கிராமத்திலும், நெசல் கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
Tags:    

Similar News