செய்திகள்

தண்ணீர் தட்டுப்பாடுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது - மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு

Published On 2019-06-19 08:33 GMT   |   Update On 2019-06-19 08:38 GMT
தண்ணீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம்:

தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையொட்டி சில பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், மேலும் சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

அதில் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த காரணத்தை கொண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என்றும், பள்ளி, கல்வித்துறை மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என சுமார் 2 ஆயிரத்து 400 பள்ளிகளுக்கு இந்த சுற்றிக்கை அனுப்பப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News