செய்திகள்

திருவாரூர் விளமலில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்

Published On 2019-06-09 16:04 GMT   |   Update On 2019-06-09 16:04 GMT
திருவாரூர் விளமல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
திருவாரூர்

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து உலக உணவுப்பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருவாரூர் விளமல் பகுதியில் உணவகங்கள், மளிகை கடைகளில் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது உணவகங்களில் அயோடின் கலந்த உப்பினையே உணவுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும், உப்பில் அயோடின் உள்ளதா என கண்டறியும் சோதனை குப்பி கொண்டு அவர்களுக்கு சோதித்து கண்பிக்கப்பட்டது. 

பாலித்தீன் பைகளில் சூடான உணவு பொட்டலமிடப்பட்ட உணவகத்தில் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் பான்பராக், புகையிலை விற்பனைக்கு உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டு புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் பழக்கடைகளில் ரசாயனம் தெளிக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். இதில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் திருவாரூர் உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர் அன்பழகன், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ஜோதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News