செய்திகள்

கடந்த 1½ ஆண்டுகளில் மணல் கடத்தியதாக 179 லாரிகள் பறிமுதல்

Published On 2019-06-08 18:21 GMT   |   Update On 2019-06-08 18:21 GMT
கடந்த 1½ ஆண்டுகளில் மணல் கடத்தியதாக 179 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கரூர் வருவாய் கோட்டாட்சியர் கூறினார்.
கரூர்:

கரூர் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் அள்ளி கடத்தப்படுவதாக கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவத்தன்று இரவு மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி பகுதியில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியையும், மணல் அள்ள பயன்படுத்தபட்ட பொக்லைன் எந்திரத்தையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரியின் உரிமையாளர், டிரைவர் மீது வழக்கு தொடர வருவாய்த்துறை யினர் போலீசாருக்கு பரிந்துரை செய்தனர்.

இது தொடர்பாக கரூர் வருவாய் கோட்டாட்சியர் கூறுகையில், கடந்த 1½ ஆண்டு காலத்தில் ரூ.11 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான 187 யூனிட் மணலையும், மணல் கடத்திய 179 லாரிகள், 169 மாட்டுவண்டிகள், 3 டிராக்ட்டர்கள் 4 இருசக்கர வாகனங் கள், மணல் அள்ளப்பயன் படுத்தப்பட்ட 10 பொக்லைன் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மணல் கடத்தியவர் களிடமிருந்து அபராதமாக ரூ.55 லட்சத்து 25 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News