செய்திகள்
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை அளித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி.

நாமக்கல் அரசுப் பள்ளியில் மகன், மகளை சேர்த்த நீதிபதி

Published On 2019-06-05 04:13 GMT   |   Update On 2019-06-05 04:13 GMT
அரசு பள்ளியில் படித்தால் மதிப்பு குறைவு, தனியார் பள்ளியில் படித்தால் தான் கவுரவம் என நினைக்கும் இந்த காலத்தில் நீதிபதி ஒருவர் தனது மகன், மகளை அரசு பள்ளியில் சேர்த்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இன் நீதிபதியாக இருப்பவர் வடிவேல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு இடமாறுதலாகி வந்தார்.

நாமக்கல்லில் வசித்து வரும் இவர், திருச்செங்கோடு சாலையில் உள்ள வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது மகள் ரீமாசக்தி மற்றும் மகன் நிஷாந்த்சக்தி ஆகியோருடன் வந்தார்.

இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் பி. சாந்தியிடம், தனது குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கை வழங்குமாறு கோரி விண்ணப்பத்தை அளித்தார்.

இதையடுத்து, நீதிபதியின் மகள் ரீமாசக்தியை 8-ம் வகுப்பிலும், மகன் நிஷாந்த்சக்தியை 6-ம் வகுப்பிலும் சேர்க்கும் நடவடிக்கையை தலைமை ஆசிரியை மேற்கொண்டார்.

இதற்கு முன்னர் துறையூரில் வடிவேல் பணியாற்றிய போதும், தனது குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே அவர் படிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News