செய்திகள்

ரம்ஜான் பண்டிகை- எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வாழ்த்து

Published On 2019-06-04 07:11 GMT   |   Update On 2019-06-04 07:11 GMT
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ‘ரம்ஜான்’ வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோரின் ஏழ்மையைப் போக்கிட உணவும், செல்வமும் வழங்கி, சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவிபுரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் எங்களது நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News