செய்திகள்

ராஜபாளையம் அருகே மில் அதிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி

Published On 2019-05-21 10:38 GMT   |   Update On 2019-05-21 10:38 GMT
ராஜபாளையம் அருகே மில் அதிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் முத்து கலசலிங்கம் (வயது45). இவர் அதே பகுதியில் பேண்டேஜ் ரக துணியை உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு இவரிடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த புத்தேஷ்‌ஷர்சா என்ற வியாபாரி பல தவணைகளில் ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 350 மதிப்புள்ள பேண்டேஜ் துணிகளை வாங்கினார்.

ஆனால் அதற்கான பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டும் முத்துகலசலிங்கத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி ரூ.7 லட்சம் மோசடி செய்த வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News