செய்திகள்

சாரல் மழை - முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து

Published On 2019-05-11 08:27 GMT   |   Update On 2019-05-11 08:27 GMT
சாரல் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் இந்த ஆண்டு வறட்சியின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அவ்வப்போது மழை பெய்த போதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அணைகளின் நீர் மட்டம் உயராமலேயே உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றுவதால் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இநத நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று வரை நீர் வரத்து இல்லாத நிலையில் இன்று 288 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 112.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது

வைகை அணையின் நீர் மட்டம் 37.17 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.30 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 95.44 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்டுகிறது. பெரியாறு 30.8, தேக்கடி 12.6, உத்தமபாளையம் 4.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News