செய்திகள்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்- மின்னணு எந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணி தொடக்கம்

Published On 2019-05-04 09:33 GMT   |   Update On 2019-05-04 09:33 GMT
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணி தொடங்கியது. #TNAssemblyByElection
மதுரை:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இங்கு அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 37 பேர் களத்தில் உள்ளனர்.

திருப்பரங்குன்றம் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 295 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைப்பதற்காக 1,400 எந்திரங்கள் முதற்கட்டமாக மதுரை கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மதுரை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் இருந்து அனுப்பும் பணி இன்று தொடங்கியது.

இந்த எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகம் கொண்டுவரப்பட்டன. அங்கு திருச்சி பெல் அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. #TNAssemblyByElection

Tags:    

Similar News