செய்திகள்

உயிரியல் பூங்கா, கோவளம் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல 150 சிறப்பு பஸ்கள்

Published On 2019-04-20 08:52 GMT   |   Update On 2019-04-20 08:52 GMT
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Specialbus

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பஸ்களும், கோவளத்திற்கு 3 பஸ்களும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21 பஸ்களும், மாம்மல்லபுரம்- 7 பஸ்களும் விடப்பட்டுள்ளது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு -8, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் வீதம் விடுமுறை நாட்களில் விடப்படுகின்றன.

இந்த சிறப்பு பஸ்கள் 21 ஜி, 27 எல், 25 ஜி, 11 எச், 12 ஜி, 45 பி, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22 பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, ஈ18, 70வி, 99, வி51, 517கட், 109கட், 515, 588, 514, 547, 580, 159, 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. #Specialbus

Tags:    

Similar News