செய்திகள்

உடுமலை அருகே ரூ.2½ லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை

Published On 2019-03-25 11:45 GMT   |   Update On 2019-03-25 11:45 GMT
உடுமலை அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த வேனை நிறுத்தினர். வேனில் உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 700 இருந்தது.

வேனை ஓட்டி வந்த உதயா என்பவரிடம் விசாரித்தபோது திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் வாழைக்காய் லோடு ஏற்றி வந்த பணம் என கூறினார்.

கைப்பற்றப்பட்ட பணம் உடுமலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை தாசில்தார் தங்கவேல் விசாரணை செய்து வருகிறார். #tamilnews
Tags:    

Similar News