செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் - வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

Published On 2019-03-16 10:49 GMT   |   Update On 2019-03-16 10:49 GMT
பொள்ளாச்சியில் இளம் பெண்களையும் மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களையும் மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.

பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் மேரி ஜெமிலா வெற்றி கொடி, சாந்த குமாரி, கண்மணி, சுசித்திரா, சுபாஷினி, கேத்தரின் ஜெனிபர், வள்ளி பார்க்கவி, ஜமுனாராணி, ஜெயவீரபாண்டியன், அண்ணாதுரை, காமராஜ், சிவா வெங்கட் நாராயணன் தீபாகரன், நடேசன், மற்றும் வழக்கறிஞர் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். #PollachiAbuseCase
Tags:    

Similar News