செய்திகள்

சென்னையில் ரூ.17½ லட்சத்துடன் வாலிபர் சிக்கினார் - ஹவாலா பணமா?

Published On 2019-03-06 11:01 GMT   |   Update On 2019-03-06 11:01 GMT
சென்னையில் ரூ.17½ லட்சத்துடன் வாலிபர் கைதான சம்பவம் குறித்து அது ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல உணவகம் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

இங்கு வந்த வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக மற்றவர்களின் வங்கி கணக்கில் ஏ.டி.எம். எந்திரம் மூலமாக பணம் செலுத்திக் கொண்டிருந்தார். இதனை கவனித்த வாடிக்கையாளர் சந்தேகம் அடைந்து ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் துரையிடம் தெரிவித்தார்.

அவர் பணம் செலுத்திக் கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் மண்ணடியை சேர்ந்த ரத்தர்சாகிப் என்பது தெரிந்தது. பையை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

மொத்தம் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.

இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் யாருடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்? இவ்வளவு பணம் கிடைத்தது எப்படி? ஹவாலா பணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News