செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.6.23 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது

Published On 2019-02-22 13:01 GMT   |   Update On 2019-02-22 13:01 GMT
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 17.9 கிலோ தங்கத்தை சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். #Goldseized #Rs6.24croreGold #Chennaiairport
சென்னை:

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் தங்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி அதிகமாக உள்ளதால் கள்ளத்தனமாக பல்வேறு வழிகளின் மூலம் தங்கம் கடத்தி வருபவர்களின் என்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அவ்வகையில், சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தின் வழியாக சிலர் பெருமளவிலான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.

இதைதொடர்ந்து, பயணிகள் கொண்டுவரும் சரக்குகளை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்தனர். அப்போது வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட  17.9 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் 1.1 கோடி ரூபாய் மதிப்பிலான கேமரா லென்ஸ்கள், கைபேசிகள் மற்றும் கணக்கில் வராத 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் ஆகியவையும் நேற்றைய சோதனையில் கைப்பற்றப்பட்டதாகவும், இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #Goldseized  #Rs6.24croreGold #Chennaiairport
Tags:    

Similar News