செய்திகள்

அரியலூர் துணை ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் நிதி உதவி

Published On 2019-02-21 17:53 GMT   |   Update On 2019-02-21 17:53 GMT
கார்குடி கிராமத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சிவசந்திரன் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் வைப்பு தொகைக்கான ஆவணத்தை ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் வழங்கினர்.
பெரம்பலூர்:

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், கேரளாவை சேர்ந்த வசந்தகுமார், கர்நாடகாவை சேர்ந்த குரு, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பப்லுசந்த்ரா, சுதிப் பிஸ்வாஸ், ஓடிசாவை சேர்ந்த சாஹூ, மனோஜ்குமார் பெஹ்ரா ஆகிய 8 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 40 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் வைப்பு தொகைக்கான ஆவணத்தை ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன மூத்த பொதுமேலாளர்கள் வெங்கட்ராமன், சதாசிவம், பொதுமேலாளர் ஜான்சன், துணை பொதுமேலாளர் பாலகணேசன் மற்றும் அதிகாரிகள் வழங்கினர். 
Tags:    

Similar News