செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2019-01-07 10:27 GMT   |   Update On 2019-01-07 10:27 GMT
கும்மிடிப்பூண்டி அருகே முறையாக வந்து செல்லாத அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது தேர்வாய் கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக முறையாக அரசு பஸ்கள் வந்து செல்லவில்லை. எனவே போக்குவரத்து வசதியின்றி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முறையாக அரசு பஸ்களை இயக்கிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று காலை அவ்வழியாக வந்த 3 அரசு பஸ்களை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் போக்குவரத்து டெப்போ அதிகாரிகள் மற்றும் பாதிரி வேடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தினர்.

பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News