செய்திகள்

வைகை அணையில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற தூய்மைப்பணி

Published On 2018-12-20 08:49 GMT   |   Update On 2018-12-20 08:49 GMT
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் தூய்மைப்பணி கலெக்டர் நடராஜன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் முன்னிலையில் இன்று நடந்தது. #VaigaiDam
மதுரை:

மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பில் வைகை ஆற்றில் திருவேடகம் முதல் அங்காடிமங்கலம் வரையும், மாநகராட்சியின் சார்பில் குருதியேட்டர் காமராசர் பாலம் முதல் ஓபுளாபடித்துறை வரையும் என 44 கிலோ மீட்டர் வரை இன்று நடைபெற்ற மாபெரும் தூய்மைப் பணியில் மொத்தம் 25 ஆயிரம் பங்கேற்றனர்.

இப்பணியில் துப்புரவு ஊழியர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள், மண் கூட்டும் பணி யாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும், நாட்டுநலப்பணி, தேசிய மாணவர்படை, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வைகை ஆற்றில் கலெக்டர் தலைமையில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #VaigaiDam

Tags:    

Similar News