செய்திகள்

கோவையில் காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி

Published On 2018-12-10 10:57 GMT   |   Update On 2018-12-10 10:57 GMT
கோவையில் இன்று அதிகாலை மாணவி ஒருவர் காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன்.

இவரது மகள் நந்தினி (வயது 25) டவுன்ஹாலில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் எம்.எட். படித்து வருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நந்தினி நேற்று இரவு கல்லூரிக்கு திரும்பினார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கோவை காந்திபுரம் பார்க் கேட் சிக்னல் அருகே நடந்து சென்ற இவர் திடீரென புதிய பாலத்தில் ஏறி கீழே குதித்தார்.

இதில் காயமடைந்த அவர் அலறித்துடித்தார். அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் நந்தினியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நந்தினி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கடந்த 6 மாதங்களாக ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் முதற்கட்டமாக இருவரின் ஜாதகத்தையும் ஜோதிடரிடம் கொடுத்து பார்த்த போது பொருத்தம் இல்லை என கூறி உள்ளார்.

இதனால் வேதனையடைந்த நந்தினி நேற்று கோவிலுக்கு சென்று விட்டு கல்லூரிக்கு திரும்பிய போது, பாலத்தில் இருந்து குதித்தது தெரிய வந்தது. இதுகுறித்து அறிந்ததும் நந்தினியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News