செய்திகள்

பண மோசடி விவகாரம்- நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-12-07 15:16 GMT   |   Update On 2018-12-07 15:16 GMT
திருச்சி அருகே பண மோசடி விவகாரத்தில் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா. பேட்டை தேவானூர் புதுநகர் நேஷனல் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவரது மனைவி பத்மாவதி. சரவணன் தா.பேட்டை தேவாங்கர் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதன்மூலம்  ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.  

சரவணனிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் பணத்தை  முறையாக செலுத்தவில்லை. இதனால் அவருக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டது. இதற்காக ஏலச்சீட்டு போட்டவர்களின் பணத்தை எடுத்து செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை வழங்கவில்லை. இதனால் சீட்டு போட்டவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.

நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பலர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சரவணனிடம் விசாரணை நடத்தி பணத்தை திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.

நேற்று சரவணன் அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் பணத்தை திருப்பி தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதில்  அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த பிரச்சினை காரணமாக மனவேதனையடைந்த சரவணன் அலுவலகத்திற்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  
இது குறித்த தகவல் அறிந்ததும் தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலு வலக கதவை உடைத்து சரவணன் உடலை  மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பண மோசடி விவகாரத்தில்  சரவணன் தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News