செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் டாக்டர்கள் மின்னல் எம்போரா, சுதாகர் ஆகியோர் ஆஜராக வந்த காட்சி.

ஜெயலலிதா மரண விசாரணை- 2 அப்பல்லோ டாக்டர்கள் ஆஜர்

Published On 2018-11-28 07:45 GMT   |   Update On 2018-11-28 07:45 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று 2 அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். #JayaDeathProbe #ArumugasamyinquiryCommission
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.

அப்பல்லோவில் உள்ள தொற்றுநோய் தடுப்பு சிறப்பு டாக்டர் ராமகோபால கிருஷ்ணன், தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன், நரம்பியல் சிகிச்சை பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இன்று மயக்கவியல் துறை டாக்டர் மின்னல் எம்போர, டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.


இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் கொடுப்பதால் விசாரணையில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொருவர் கொடுக்கும் வாக்குமூலமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த டாக்டர்களிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர். அடுத்தகட்டமாக மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

டாக்டர்களிடம் விசாரணை நடத்தி முடித்ததும் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  #JayaDeathProbe #ArumugasamyinquiryCommission
Tags:    

Similar News