செய்திகள்

ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ரெயில் பயணி கைது

Published On 2018-11-18 15:02 GMT   |   Update On 2018-11-18 15:02 GMT
ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய பயணியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

ரெயிலில் திருவனந்தபுரம், பாப்பனகோடு பகுதியை சேர்ந்த ராமசாமி(வயது36) என்பவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

இந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகராக லார்டுவின் ஆனந்த் என்பவர் இருந்தார். ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது லார்டுவின் ஆனந்த் முன்பதிவு பெட்டியில் உள்ள ஒவ்வொருவரிடமும் பயண டிக்கெட்டை பரிசோதித்து வந்தார். ராமசாமி டிக்கெட்டையும் பரி சோதித்து கொண்டிருந்தார்.

அப்போது லார்டுவின் ஆனந்துக்கும், ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ராமசாமி டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்.

இதையடுத்து ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. டிக்கெட் பரிசோதகர் ஈரோடு ரெயில்வே போலீசில் இது குறித்து புகார் செய்தார்.

அதன் பேரில் வழக்குபதிவு செய்த ரெயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ராமசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News